கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

Published By: Digital Desk 2

03 Sep, 2026 | 04:58 PM
image

எம்மில் பலரும் நெருக்கடியான தருணங்களில், 'போதுமடா மனுச ஜென்மம்! இதுக்கு மேல் பிறவியே வேண்டாம் 'என சலித்துக் கொண்டு பேசுவதை கேட்டிருப்போம்.

வேறு சிலருக்கு, 'இதுவே கடைசி பிறவியாக இருந்திடக் கூடாதா?' என ஏக்கத்துடன் இறைவழிபாட்டில் ஈடுபடுவதும் உண்டு.

இந்த தருணத்தில் எம்மில் சிலருக்கு கடைசி பிறவி என்பதற்கான வரையறை என்ன? என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். இதற்கான விளக்கத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வருமாறு விவரித்து இருக்கிறார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 12-ஆம் இடத்தில் குரு பகவான் அல்லது கேது பகவான் அமையப்பெற்றிருந்தால்.. அதுதான் அவர்களின் கடைசி பிறவி என உணரலாம்.

புரிந்து கொள்ளலாம். சிலர் இதனை அவர்களுடைய வாழ்க்கையில் மத்திம பகுதியில் தெரிந்து கொண்டு கடைசி பிறவி என்பதால் புண்ணியங்களை அதிக அளவில் செய்திட வேண்டும் என விரும்பி பல செயல்களில் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு நற்பெயரும் , அவப்பெயரும் இணைந்தே வரும். குறிப்பாக பொது காரியங்களில் இவர்களுடைய பங்களிப்பு குறித்த சாதக மற்றும் பாதகமான விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கும்.

இதனால் ஏற்படும் எதிர்மறையான வினைகளை நீக்குவதற்கு சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் வருடத்திற்கு ஒரு முறையேனும் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று தரிசிக்க வேண்டும்.

இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளத் தொடங்கினால் கடைசி பிறவியில் எந்தவித பாவங்களும் இல்லாமல், புண்ணியங்களுடன் மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46
news-image

தடைகளைத் தகர்க்கும் ஆலய யானை வழிபாடு

2026-09-28 16:48:22