யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ள நல்லூர் பிரதேசத்தில் நல்லூர் பிரதேசசபையின் சுகாதார பிரிவினர் இன்று விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

நல்லூர் பிரதேச சுகாதார பிரிவினரால் மேற்படி டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.30 மணி  தொடக்கம் பகல் 1 மணி வரை  மேற்கொள்ளப்பட்டது.

நல்லூரில் குறிப்பாக ஜே.110, ஜே 118 கிராமசேவகர் பிரிவுகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டுள்ளது. எனவே இந்த கிராமசேவர் பிரிவுகளில் இன்றைய தினம் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் நல்லூர் பிரதேச சபையின் சுகாதார பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து ஈடுபட்டனர்.

மத்திய சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு குழுவின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அமைய நல்லூரில் இன்று வீடு வீடாக சென்ற சுகாதார பிரிவினர் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.