2026 முதல் ஆறுமாத காலப்பகுதியில் சுங்க வருமானம் 130 சதவீதமாக உயர்வு

03 Sep, 2026 | 01:31 PM
image

2026.06.30 ஆம் திகதி  வரையிலான காலப்பகுதியில் 1,060, 559 மில்லியன் ரூபா சுங்க வருமானம் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளது என சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130 சதவீத முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.

2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316, 000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை'  1,000சிசி 'இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம்  ஆகும்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம்,இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரனையில் அதிக வேகமாக பயணித்த மோட்டார்...

2026-09-09 13:03:57
news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40