வெல்லம்பிட்டியவில் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான 12 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

03 Sep, 2026 | 01:09 PM
image

(செ.சுபதர்ஷனி)

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று  வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேதவத்தை பகுதியில் சோதனை நடவடிக்க ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்தின்  மூலம் ஈட்டப்பட்டது என சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா  ரொக்கப் பணமும்  அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட  விசாரணைகளின்போது, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள  பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் , சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09