கொகரெல்ல பகுதியில் குடும்பத் தகராறில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது!

03 Sep, 2026 | 12:55 PM
image

கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02) வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.

நேற்று  இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான (மருமகன்) சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறியுள்ளதோடு, இதன்போது ஆத்திரமடைந்த மருமகன், வீட்டிலிருந்த கூரிய ஆயுதத்தால் மாமனாரைத் தாக்கிப் கொலை செய்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09