தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்: பிள்ளைகளை தண்டித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை – அமைச்சு எச்சரிக்கை

03 Sep, 2026 | 12:41 PM
image

(நமது நிருபர்)

தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதையோ முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பரீட்சைப் பெறுபேறுகள் எவ்வாறானதாக இருப்பினும், அதனைக் காரணம் காட்டி பிள்ளைகளுக்கு எவ்விதமான உடல் ரீதியான தண்டனைகளையோ அல்லது மன உளைச்சல்களையோ வழங்குவதை பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு அசௌகரியத்தை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதிலிருந்தும் உடனடியாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுவதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் பிரகாரம் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல்: குற்றப்...

2026-09-05 17:16:16
news-image

நானுஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு...

2026-09-05 17:05:32
news-image

காரைதீவில் அதிகரித்துள்ள யானைகளின் அச்சுறுத்தல்: உடனடியாக...

2026-09-05 16:27:13
news-image

நாமலின் கைது புதிய விடயமல்ல; பிணை...

2026-09-05 16:36:59
news-image

கீழ் மல்வத்து ஓயா பெயரில் குடியேற்ற...

2026-09-05 16:28:17
news-image

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு...

2026-09-05 16:13:20
news-image

கொட்டகலை பாதை அபிவிருத்தியில் ஊழல் குற்றச்சாட்டு:...

2026-09-05 15:59:49
news-image

சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று...

2026-09-05 15:51:45
news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50