(ஆர்.யசி)

நுவரெலியா, அம்பகமுவை பிரதேசசபைகளின் எல்லைநிரணயம் தொடர்பில் இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பாவுடன் பேச்சுவாரத்தை நடத்துவதாகவும் தீர்வு கண்டபின்னர் மாநகர, நகர மற்றும் பிரதேசசபை சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலுக்கு விடுமாறும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். என்னை பகடைக்காயாக பயன்படுத்தி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கவில்லை, என்னை எவரும் பகடைக்காயாக பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.