நயினாதீவு - நெடுந்தீவு படகு சேவை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையில் தீர்வு

Published By: Digital Desk 2

03 Sep, 2026 | 12:31 PM
image

(எம்.நியூட்டன்)

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு படகு உரிமையாளர்களுக்கு இடையில் நீண்டகாலமாக காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு, நியாயமான கட்டணம், படகு சேவையின் ஒழுங்குமுறை மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே அறவிடுதல். நெடுந்தீவு படகுகளுக்கு முன்னுரிமை வழங்குவதில் நயினாதீவு படகு உரிமையாளர்கள் ஒற்றுமையுடன் செயற்படுதல்.
குறிகட்டுவான் பகுதியில் வேலணை பிரதேச சபையின் ஆதரவுடன் நேரக்கணிப்பாளர் ஒருவரை நியமித்து, படகு சேவைகளை ஒழுங்குபடுத்துதல்.

படகுகளின் விபரங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துதல்.

படகுகளை வாடகைக்கு அமர்த்துவதற்கான தொடர்பு இலக்கங்கள் மற்றும் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கான தொடர்பு இலக்கங்களை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துதல்.

இதனுடன், படகு சேவையை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கான பல முக்கியமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச செயலாளர், வேலணை பிரதேச சபையின் தவிசாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், படகு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் பிரச்சினைகளை அரசியலாக்குவதல்ல எமது நோக்கம் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே மேசையில் அமர்த்தி, நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதே எமது அணுகுமுறை.

மக்களின் பயணம் பாதுகாப்பாகவும், நியாயமான கட்டணத்திலும் அமைய வேண்டும். அதேவேளை, உள்ளூர் படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கும் ஒழுங்குமுறையான நிர்வாகமே எமது இலக்கு என அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:22:32
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09
news-image

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ந்து அழுத்தம்...

2026-09-08 16:20:53
news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57