கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்பு!

03 Sep, 2026 | 12:00 PM
image

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக  எயார் வைஸ் மார்ஷல்  இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல   பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU)   புதிய உபவேந்தராக  எயார் வைஸ் மார்ஷல்  இந்திக்க விக்ரமசிங்க புதன்கிழமை (02) பொறுப்பேற்றார்.  இந்நிகழ்வின்போது அவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

கண்டி தர்மராஜ கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான இவர், 1993-ஆம் ஆண்டில் ஜெனரல் சர் ஜோன்  கொத்தலாவல  பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 11 ஆவது மாணவர் குழுவின் மூலம் இலங்கை விமானப்படையில் இணைந்து, 1996-ஆம் ஆண்டில் விமானம் மற்றும் பொதுப் பொறியியல் பிரிவில் பிளைன் ஆஃபீஸ்ர் பதவிநிலையில் நியமிக்கப்பட்டார்.

தனது நீண்டகால சேவையின்போது, இலங்கை விமானப்படையின் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொதுப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும் அவர் கொத்தலாவல  பாதுகாப்பு கல்லூரியில் வானூர்திப் பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மனிதவள மேலாண்மையில் முதுகலை அறிவியல் பட்டத்தையும், இந்திய விமானப்படை தொழில்நுட்ப கல்லூரியில் வானூர்திப் பொறியியலில் முதுகலை பட்டயத்தையும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) தர மேலாண்மையில் முதுகலை பட்டயத்தையும் பெற்றுள்ளார்.

அவர் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆகியவற்றில் பட்டதாரியும்  ஆவார்.  அவர் ஐக்கிய இராச்சியத்தின் (UK) பட்டயப் பொறியாளர் மற்றும் ராயல் வானூர்தி சங்கத்தின் உறுப்பினர் தகுதி உட்பட பல உயர் தொழில்முறை தகுதிகளைப் பெற்றுள்ளார்.  நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக "உத்தம சேவா பதக்கம்" (USP) அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு கொழும்பு தாஜ்...

2026-09-09 13:34:17
news-image

ஹொரனையில் அதிக வேகமாக பயணித்த மோட்டார்...

2026-09-09 13:03:57
news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56