இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை – அனில் ஜெயந்த

Published By: Digital Desk 2

03 Sep, 2026 | 11:57 AM
image

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ மறுத்துள்ளார்.

மத்திய வங்கியின் தரவுகளை தவறாகப் பயன்படுத்தி பரப்பப்படும் செய்திகள் குறித்து தெளிவுபடுத்திய அவர், கடன்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் காலாண்டு வாரியாக "Debt Bulletin" அறிக்கை மூலமாகவே அரசாங்கத்தினால் பொறுப்புடன் வெளியிடப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் ஜூன் மாத இறுதி நிலவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதற்கென உள்ள நிலையில், உண்மையான தரவுகளை ஆராயாமல் கடன் சுமை பில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

அரசு மேற்கொள்ளும் கடன்கள் ரூபாய்களிலான உள்நாட்டுக் கடன்கள் மற்றும் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களிலான வெளிநாட்டுக் கடன்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இதில் நாட்டின் மொத்தக் கடனை அமெரிக்க டாலர்களில் கணக்கிடும்போது கடன் சுமை உண்மையில் குறைந்துள்ளதே தவிர அதிகரிக்கவில்லை.

2025 டிசம்பர் 31 நிலவரப்படி நாட்டின் மொத்தக் கடன் 100.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், அது 2026 மார்ச் மாதத்தில் 98.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. தொடர்ந்து 2026 ஜூன் மாத இறுதியில் இத்தொகை 95.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மேலும் குறைந்துள்ளது.

அதேபோல், கடன் சுமை எண்களின் அடிப்படையிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாகவும் கணிசமாகக் குறைந்துள்ளது.

2032 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95% எனும் கடன் சுமை அளவை இலங்கை ஏற்கனவே 2025 டிசம்பர் மாதத்திற்குள் எட்டிவிட்டதுடன், 2026 ஜூன் மாதமளவில் இந்த சதவீதம் 88.8% ஆக மேலும் குறைந்துள்ளது.

கடன் தொகை எண்களின் அடிப்படையில் மாறுபடுவதும், நாட்டின் கடன் பெறும் திறன் அதிகரிப்பதும் பொருளாதார ரீதியில் இரு வேறுபட்ட விடயங்களாகும். 

எனவே, எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைச் சரியாகப் பகுப்பாய்வு செய்து, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20