பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக் கட்டுரைப் போட்டி 2026: IRCSL, FALIA மற்றும் IASL இணைந்து அறிவிப்பு!

03 Sep, 2026 | 10:23 AM
image

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (IRCSL), ஜப்பானின் உலகளாவிய ஆயுள் காப்புறுதி மேம்பாட்டு அறக்கட்டளை (FALIA) மற்றும் இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL) ஆகியன இணைந்து "பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக் கட்டுரை போட்டி இலங்கை 2026" என்ற தேசிய அளவிலான போட்டியை அறிவித்துள்ளன.

"இளம் சிந்தனைகளுக்கு ஊக்கமளிப்போம்: நாளைய எதிர்காலத்தைப் பாதுகாப்போம்" எனும் நோக்கில் மாணவர்களிடையே நிதி அறிவாற்றல் மற்றும் ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் வயதுப் பிரிவுகள்:

இப்போட்டி இலங்கை முழுவதிலும் உள்ள அரசு, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்குச் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும்.

கனிஷ்ட பிரிவு (13-16 வயது): 01 ஜனவரி 2010 முதல் 31 டிசம்பர் 2013 க்குள் பிறந்தவர்கள்.

சிரேஷ்ட பிரிவு (17-19 வயது): 01 ஜனவரி 2007 முதல் 31 டிசம்பர் 2009 க்குள் பிறந்தவர்கள்.

போட்டி நடைமுறை:

பதிவுக்காலம்: 2026 ஜூலை 15 முதல் 2026 செப்டம்பர் 30 வரை.

போட்டி நடைபெறும் காலம்: ஒக்டோபர் 2026 இல் நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் உள்ள நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.

வழங்கப்படவுள்ள 4 தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து 1 மணி நேரம் 30 நிமிடங்களுக்குள் கட்டுரை எழுத வேண்டும்.

பங்கேற்பு முற்றிலும் இலவசமானது.

மேம்படுத்தப்பட்ட பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்:

தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் ஜூனியர், சீனியர் ஆகிய இரு பிரிவுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன:

முதலாம் இடம்: ரூ. 100,000 பணப்பரிசு + டெப்லெட்  கணினி

இரண்டாம் இடம்: ரூ. 75,000

மூன்றாம் இடம்: ரூ. 50,000

மாவட்ட சிறப்பு விருதுகள்: 25 மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்படும் 144 வெற்றியாளர்களுக்குத் தலா ரூ. 10,000 வழங்கப்படும்.

வெற்றியாளர்களுக்கு அச்சிடப்பட்ட சான்றிதழ்களும், பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் உத்தியோகபூர்வ மின்னணு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு IRCSL இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ircsl.gov.lk  ஐப் பார்வையிடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58