ETF, EPF நிதிகளை மத்திய வங்கியிடம் இருந்து பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

03 Sep, 2026 | 09:45 AM
image

ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி  மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி  ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02) மாலை 5.00 மணியளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி முடிந்து வெளியேறிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குறித்த மூவர் கொண்ட குழுவில் முதலாளிமார்களின் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார். இதன் மூலம் தனியார்துறை ஊழியர்களின் ஒரே சொத்தான இந்நிதிகளின் நிர்வாகக் கட்டுப்பாடு முதலாளிமார்களிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் செப்டம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்நிதியங்களில் சுமார் 5,600 பில்லியன் ரூபாய்கள் காணப்படுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டிலும் இந்நிதிகளை நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களுக்குப் பயன்படுத்த அப்போதைய அரசு முயன்றது.

2011 இல் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு எதிரா போராடி ரொஷேன் சானக்க தனது உயிரைத் தியாகம் செய்ததுடன், நூற்றுக்கணக்கானோர் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாறியதன் மூலமே அத்திட்டம் முறியடிக்கப்பட்டதாகப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09
news-image

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ந்து அழுத்தம்...

2026-09-08 16:20:53