மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

03 Sep, 2026 | 09:41 AM
image

மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் கொழும்பு மேயருமான மொஹமட் முஸம்மிலின் மகனான மொஹமட் நிஷாம் ஜமால்தீன், நேற்று புதன்கிழமை (02)  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் 1.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற விமானத்தின் மூலம் இலண்டன் நோக்கிப் புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த போதே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை அடிப்படையாகக் கொண்டே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மொஹமட் நிஷாம் ஜமால்தீன் 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காகப் பிற்பகல் 4.30 மணியளவில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

ஜனாதிபதியை சந்தித்த இந்து குருமார்கள் ;...

2026-09-10 19:37:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37