அரசாங்கத்திடம் இருப்பது 42% வாக்குகளே; 58% மக்கள் வெளியே உள்ளனர்: நிமல் சிறிபால டி சில்வா!

03 Sep, 2026 | 09:52 AM
image

(செ.கவிஷனா)

பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் என்ற பெரும்பான்மை பலம் தற்போதைய அரசாங்கத்திற்கு இருந்தாலும், அது நாட்டின் மொத்த வாக்குகளில் 42 சதவீதம் மட்டுமே எனவும், மீதமுள்ள 58 சதவீத வாக்குகள் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்களிடமே தங்கியுள்ளன. எங்களின் அலட்சியப் போக்கே இந்த நிலைக்குக் காரணம். அவ்வாறாக சூழலில் தற்போதை அரசாங்கம் ஆட்சியை மேற்கொள்கிறது. என்று ஸ்ரீ சுதந்திர கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (02) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 75 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த காலங்களில் வீசிய சுனாமி அலைக்கு முகங்கொடுத்துள்ளன. அந்த சுனாமியில் சிக்கி இன்று சிதறிப் உடையாமல் இருக்கும் ஒரு கட்சியைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அவ்வாறு சிதறி போனவற்றில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றாகும். இருப்பினும், அடிமைத்தனத்துக்குட்பட்டிருந்த ஒரு நாட்டில் தேசிய சிந்தனையை விதைத்த பெருமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தமையே ஆகும். அத்துடன் நாட்டுக்கு கிடைத்த பெயரளவு சுதந்திரத்தை நடைமுறை சுதந்திரமாக மாற்றியமைக்கும் செயற்திட்டத்தை முன்னெடுத்தோம்.

இதேவேளை, பாராளுமன்றத்துக்குள் 159 ஆசனங்கள் என்ற பெரும்பான்மை காணப்பட்டாலும் அது நாட்டின் மொத்த வாக்குகளில் 42 சதவீதமாகும். மீதமுள்ள 58 சதவீத வாக்குகள் பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள மக்களிடமே தங்கியுள்ளன.

எனவே பாராளுமன்ற பெரும்பான்மை ஆசன பலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் விருப்பமாக மாறி முடியாது. அதனால் பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள மக்களின் ஆதரவை பெறுவதே உண்மையான அரசியல் யாதார்த்தமாகும்.  

மேலும், வளரந்து வரும் நவீன உலகில் காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப புதிய தலைமுறையினரிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அரசியல் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும். அதாவது ஒருவரை ஒருவர் முடக்கும் அரசியலில் இருந்து அதனை தவிர்த்து ஒற்றுமையான இளைஞர் அணியிடம் பொறுப்புக்களை வழங்க வேண்டும். அதற்காக எனது பதவியை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09