இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமலுக்கு அழைப்பாணை

Published By: Digital Desk 2

03 Sep, 2026 | 08:42 AM
image

(நமது நிருபர்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்க்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக நாளை வெள்ளிக்கிழமை (04) ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தினம் காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஆணைக்குழு தனது கட்சிக்காரருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக நாமல் ராஜபக்க்ஷவின் சட்டத்தரணியான முதித்த ஆர்.லொக்குமுதலி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் நாமல் ராஜபக்க்ஷ இந்த அழைப்பாணைக்கு இணங்க குறித்த தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என குறிப்பிட்ட அவர் கடந்த திங்கட்கிழமையன்று ஆணைக்குழுவின் முன்பாக ஆஜராகுமாறு முதலில் அழைக்கப்பட்டதாகவும் கூறினார். 

இருப்பினும், இந்த அழைப்பாணைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09