(நெவில் அன்தனி)
அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவின் மும்பை மற்றும் வடோதரா நகரங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று அறிவித்தது.
உலகின் ஆறு முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவை பங்கேற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடர், மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஒவ் இண்டியா (CCI) மற்றும் வடோதரா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகியவற்றில் அரங்கேற்றப்படும்.
தகுதி பெறுவதற்கான கடைசி திகதியான 2026 ஜூலை 6 திகதியன்று சர்வதேச ரி20 அணிகளுக்கான தரவரிசையில் பெற்ற இடங்களின் அடிப்படையில் தகுதி பெற்ற இந்த ஆறு அணிகளும், லீக் முறையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பெப்ரவரி 28 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.
இந்தத் தொடர் முதன் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் கோரப்பட்ட தேவையான சீர்திருத்தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், தற்போது இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.
போட்டியை நடத்தும் மாற்று நாட்டைப் பரிந்துரைப்பதற்கு முன்னர் ஐசிசி தனது நிலையான மதிப்பீட்டு அளவு கோல்களின் அடிப்படையில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய மூன்று நாடுகளை பரிசீலித்தது. இதன் பின்னர் இந்தியாவைத் தேர்வு செய்ய செப்டம்பர் 2ஆம் திகதி (இன்று) சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒப்புதல் அளித்தது.
2027 ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முழுமையான போட்டி அட்டவணை மற்றும் டிக்கெட் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM