பிரதான கழகங்கள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: பதுரெலியா கழகம் சம்பியனானது

02 Sep, 2026 | 06:28 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த வருடத்துக்கான பிரதான கழகங்களுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதுரெலியா கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை சூடியது.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் இறுதிப் போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய பதுரெலியா கிரிக்கெட் கழகம் 97 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டி சம்பியனானது.

அணித் தலைவி சுமுது நிசன்சலா குவித்த அரைச் சதம், ஷெஹாரா இதுவரி பதிவு செய்த 6 விக்கெட் குவியல் என்பன பதுரெலியா கழகத்தின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கிரிக்கெட் கழகம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி சுமுது நிசன்சலா 56 ஓட்டங்களையும் ரஷ்மி நேத்ராஞ்சலி 30 ஓட்டங்களையும் நேதாகி இசுராஞ்சலி 22 ஓட்டங்களையும் சச்சினி நிசன்சலா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பியூமி வத்சலா 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தேவகி ஜெகநாதன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம் 33.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரஷ்மிக்கா செவ்வந்தி 48 ஓட்டங்களையும் அமாதி விஜேசிங்க 21 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் ஷெஹாரா இதுவரி 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38
news-image

ஏஸ் கெப்பிட்டல் சிசி அணியை 64...

2026-09-10 02:04:13
news-image

பொலிஸ் கழகத்தின் கடும் சவாலை முறியடித்து...

2026-09-10 01:58:39
news-image

முவர்ஸ் அணியுடனான கால் இறுதியில் 2...

2026-09-09 22:14:27
news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26