ஜனாதிபதியுடன் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று காலை 9 மணியளவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறு இச் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.