வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

02 Sep, 2026 | 05:59 PM
image

இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்  நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு அங்கமாக, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளையினரால் இன்று புதன்கிழமை (02) பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாததை சுட்டிக்காட்டியே குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது. 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையின் கல்விக்கான வை அழிக்காதே, கல்விசார் பணியாளர்களின் பற்றாக்குறைக்கு உடன் தீர்வு காணுங்கள், கல்விக்கான நிதியினை அதிகரிக்கவும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

இன்றைய தினம் இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இந்த மதிய நேர போராட்டமானது பிரதானமாக, இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அது பிரதானமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகரித்த மாணவர் உள்வாங்கை, அதுதவிர்த்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள், மேலும் உயர்கல்விக்குரிய ஒதுக்கீடுகள் சம்பந்தமான கோரிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் வந்து இந்த மதிய நேர இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையிலே, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டு எங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுக்கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு...

2026-09-10 19:35:45
news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

ஜனாதிபதியை சந்தித்த இந்து குருமார்கள் ;...

2026-09-10 19:37:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04