பேஸ்புக் காதலி இரண்டு பிள்ளைகளின் தாய் என அறிந்த காதலன் அவளை தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம் பண்டாரகமை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

கணவனை விட்டுப் பிரிந்து தனது இரு பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவரும் குறித்த பெண்  ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.

இந் நிலையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான 22 வயது இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.குறித்த  இளைஞனும் திருமணம் செய்து, விவாகரத்துப் பெற்ற நிலையில் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

பேஸ்புக் காதலன்  தனது காதலியை  ஓய்வு நாட்களில் சந்தித்து தனது மோட்டார் சைக்களில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக காலம் கடத்தியுள்ளார். இதற்காக நிறைய பணமும் செலவு செய்துள்ளார்.

இவ்வாறிருக்க குறித்த பெண் தனது பேஸ்புக்  காதலனை பிலியந்தலையில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு வருமாறு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத போது உல்லாசமாக இருந்துள்ளார்.

இதேபோன்று வேறொரு நாள் தனது காதலியை அழைத்த போது அன்றைய தினம் தனக்கு லீவு கிடைக்காமையினால் பிலியந்தலைக்கு வர முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் பிலியந்தலையில் உள்ள அத்தை வீட்டிற்குச் சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

அக்கம் பக்கத்தினரிடம் வினவிய போது அங்கு ஒரு குடும்பம் வசிப்பதாகவும், கணவன் தூரப் பிரதேசத்தில் தொழில் புரிகின்றார் என்றும் பெண் பண்டாரகமையில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றார் என்றும் தெரியவந்துள்ளது.

கோபமடைந்த இளைஞன் காதலியை ஏன் வரவில்லை? என்று வினவிய போது லீவு கிடைக்கவில்லை என்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு வருமாறும் பதில் கிடைத்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலையின் வெளியே காத்துநின்ற குறித்த இளைஞன் நீ என்னை ஏமாற்றி விட்டாய் என தனது தலைக்கவசத்தினால்  அந்தப் பெண்ணின் தலையில் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்ட பொலிஸார் இருவரையும் கைது செய்து, இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருவருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து பொலிஸார் விடுத்துள்ளனர்.