(இராஜதுரை ஹஷான்)
உழைக்கும்போது செலுத்தும் வரி வீதம் உண்மையில் அதிகமாகவே காணப்படுகிறது. அனைவருக்கும் அது நெருக்கடியாக உள்ளது. ஆகவே இந்த வரி வீதத்தை நிச்சயம் குறைக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர்கள் சங்கத்தின் 21 ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
வரி கொள்கையை வகுப்பதால் மாத்திரம் வரி இலக்கை அடைய முடியாது. அதற்குரிய வழிமுறைகளையும், திட்டங்களையும் உருவாக்க வேண்டும். இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கடமை அளப்பரியது.
பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தன்மைக்கு நாமும் முன்னேற்றமடைய வேண்டும். இல்லையேல் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட வெளியாட்கள் அழுத்தம் பிரயோகிப்பார்கள்.
சிறந்த மாற்றத்துக்காக முதலில் நாம் மாற வேண்டும் இல்லையேல் வெளிநாட்கள் எம்மை மாற்றியமைப்பதற்கு முயற்சிப்பார்கள்.
நியாயமான அடிப்படையில் வரி செலுத்துபவர்களின் வீதத்தை அதிகரித்ததால் அதன் உச்ச பயனை நடுத்தர மக்களுக்கு வழங்க முடியும்.
உழைக்கும் போது செலுத்தும் வரி வீதம் உண்மையில் அதிமாகவே காணப்படுகிறது. ஆகவே இந்த வரி வீதத்தை குறைக்க வேண்டும். ஏனெனில் அதனால் பெரும்பாலான மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM