தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'சர்தார் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் கார்த்தி, எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், பாலாஜி சக்திவேல், நாசர் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஸ்பை திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி வை என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டி இருக்கிறது. இதன் காரணமாக இந்த முன்னோட்டத்தை இதுவரை நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM