புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்' தேறுமா?

02 Sep, 2026 | 05:16 PM
image

கன்னட நடிகர்களான சித்து மூலி மணி - ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ்  - கிருஷ்ணா விஜய் சந்திரன்-  ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக தமிழில் அறிமுகமாகும் 'கோல்ட் கால்'  திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோல்ட் கால்' திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். விற்பனை பிரதிநிதிகளின் நாளாந்த வாழ்வியலை நகச்சுவையுடன் விவரிக்கும் இந்த திரைப்படத்தை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இத்திரைப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது. இதற்காக படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டர் ...ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-10 15:55:39
news-image

நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட 'ஹைக்கூ'...

2026-09-10 17:13:50
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபாலி'...

2026-09-10 15:13:27
news-image

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'சீன்'!

2026-09-10 14:34:57
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39