செப்டம்பர் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ' ஐ அம் கேம்' திரைப்படம் - 'ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்' என அப்படத்தின் தயாரிப்பாளரான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
'ஐ அம் கேம்' திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும், படத்தினை விளம்பரப்படுத்தும் வகையிலும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் கதிர் - அண்டனி வர்கீஸ் - துல்கர் சல்மான் -நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்- ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், நாயகனுமான துல்கர் சல்மான் பேசுகையில், '' எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகி இருக்கும் படம் 'ஐ அம் கேம்'. இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் பார்க்கும் போது தமிழ் படத்தை போல் உணர்வார்கள். தமிழ் நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
மிஷ்கின் இந்தப் படத்தில் முக்கியமான அங்கம். கதிர் - சம்யுக்தா விஸ்வநாதன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் கொமர்சல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் கொமடி - ரொமான்ஸ் - சஸ்பென்ஸ் - எக்சன் - திரில்லர்- கேமிங்- என ரசிகர்கள் விரும்பும் பல அம்சங்கள் உள்ளது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு சுவாரசியமான திருப்பங்கள் இருப்பதால்.. இந்தப் படத்தை பட மாளிகையில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்'' என்றார்.
துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM