உலகளவில் பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை பிறவி இதய குறைபாட்டுடன் பிறக்கிறது என்று அண்மைய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி இதய பாதிப்புடன் பிறக்கும் பிள்ளைகள் ஐநூறில் ஒருவர் என ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். இந்நிலையில் இத்தகைய பிறவி இதய குறைபாட்டை நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
பொதுவாக தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போது அதன் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களுக்கும், நுரையீரல் நாளங்களுக்கும் இடையே சிறிய அளவிலான ரத்த நாள திறப்பு என்பது இயல்பாக இருக்கும். இதன் மூலம் இதயத்தில் இருந்து நேரடியாக உடலுக்கு குருதி ஓட்டம் நடைபெறும். இத்தகைய தருணத்தில் குழந்தை பிறந்ததும்... அவை சுவாசிக்க தொடங்கியதும்... இந்த பிரத்யேக ரத்த நாளங்கள் தானாகவே மூடி க்கொள்ளும். ஆனால் சில பிள்ளைகளுக்கு இத்தகைய ரத்தநாளங்கள் இயல்பாக மூடிக் கொள்ளாமல்.. திறந்த நிலையில் இருக்கும். இதனால் இயல்பான அளவைவிட கூடுதலான குருதி... நுரையீரல் பகுதிக்கு செல்வதால் இதயம் மற்றும் நுரையீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
பிள்ளைகள் தாய்ப்பால் மற்றும் உணவை பசியாற மறுப்பது... வியர்வை அதிகமாக வெளியாவது... அழுவது... சுவாசிக்க சிரமப்படுவது... எளிதில் சோர்வடைவது... இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது... போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
பொதுவாக இத்தகைய பாதிப்பு குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பெரும்பான்மையாக ஏற்படுவதாகவும், அத்துடன் மரபணு மாற்றம் காரணமாக சிலருக்கு ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால்... உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதுபோன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளை வைத்தியர்கள் எக்கோ கார்டியோ கிராம், மார்பக எக்ஸ்ரே, எலக்ட்ரோ கார்டியோ கிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி, முதன்மையான நிவாரணத்தையும், பிறகு சிறிய அளவிலான சத்திர சிகிச்சையும் மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணத்தையும் அளிக்கிறார்கள்.
வைத்தியர் வினோத்குமார் - தொகுப்பு அனுஷா.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM