காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

02 Sep, 2026 | 05:08 PM
image

எம்முடைய திட்டங்கள் எப்போதும் பெரிதாகவும், விரிவானதாகவும் இருக்கும். இதற்காக அடிப்படையில் உழைக்கும் தருணத்தில் பலரின் ஆதரவும் கிடைத்திருக்கும். பலரும் எம்முடைய வணிகம் சார்ந்த திட்டங்களை பாராட்டி இருப்பார்கள். எமக்குள் ஏற்பட்ட உற்சாகத்தின் காரணமாக இதனை சாத்தியப்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நினைத்திருப்போம்.

ஆனால் விவரிக்க இயலாத காரணங்களால் இந்த செயல் திட்டம் நிறைவேறாமல் சின்ன சின்ன காரணங்களால் தடையும் தாமதத்தையும் உண்டாக்கும். இத்தகைய தருணத்தில் எம்முடைய மனச்சோர்வின் வீரியத்தை அளவிட இயலாது. இதுபோன்ற தருணங்களில் நாம் நினைத்திருக்கும் காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.‌

தடைகளை தகர்ப்பவர் விநாயகப் பெருமான் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் விநாயகப் பெருமானை எப்போது நாம் தடைகளை விலக வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோமோ..! அந்த தருணம் முக்கியமானது. அதாவது நான்கு தினங்களுக்கு ஒரு முறை சுழற்சியில் வரும் பத்தரை கரணத்தின் போது.. அருகில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி, ஒன்பது முறை இடமிருந்து வலமாகவும்.. ஒன்பது முறை வலம் இருந்து இடமாகவும்.. சுற்றி வந்து விநாயகப் பெருமானின் மந்திரமான ,'ஓம் கம் கணபதையே நமக' எனும் மந்திரத்தை உச்சரித்து , நினைத்திருக்கும் காரியத்தில் மறைந்திருக்கும் தடையை அகற்றி வெற்றியை வரமாக அருள வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.

இந்த பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது நாட்கள் மேற்கொண்டால்... அதாவது பத்தரை கரணம் வரும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை என தொடர்ந்து ஒன்பது நாட்கள் இந்த பிரார்த்தனையை நம்பிக்கையுடன் மேற்கொண்டால்... தடைகள் அனைத்தும் விலகி, நீங்கள் நினைத்த திட்டத்தில் வெற்றி பெறுவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46
news-image

தடைகளைத் தகர்க்கும் ஆலய யானை வழிபாடு

2026-09-28 16:48:22