சிரிக் நகரில் திருமண நிகழ்வு மீது அமெரிக்கா தாக்குதல் ; 05 பேர் உயிரிழப்பு - ஈரான் குற்றச்சாட்டு

Published By: P. Saranya

02 Sep, 2026 | 04:29 PM
image

ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 04 வயதுக் குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவிலுள்ள ஈரானியத் தூதரகம் ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதனை "அமெரிக்கப் பயங்கரவாத இராணுவத்தின் கொடூரக் குற்றம்" எனச் சாடியுள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானிய வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்ட நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பிலில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படைகள் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதல் இதுவாகும். இதனால் மேற்காசியாவில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச்...

2026-09-10 15:49:51
news-image

உலக சுகாதார ஸ்தாபன பிராந்தியப் பணிப்பாளர்...

2026-09-10 14:58:27
news-image

இந்தியாவில் எதிர்வரும் 12, 13ல் 18வது...

2026-09-10 13:21:50
news-image

உலகின் அதிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட்...

2026-09-10 12:27:36
news-image

இடைத்தேர்தல் வெற்றி வாக்குறுதி : அமெரிக்கர்களுக்கு...

2026-09-10 11:15:10
news-image

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ –...

2026-09-10 09:51:21
news-image

சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிப்பு...

2026-09-10 13:03:12
news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59