முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

02 Sep, 2026 | 04:10 PM
image

(எம்.நியூட்டன்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று புதன் கிழமை (02) காலை இடம்பெற்றது.

யாழ். தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் மற்றும் பாரியார் இணைந்து மலர்மாலை அணிவித்தார்கள் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி அஞ்சலி செலுத்தினர். 

02.09.1985 ல் யாழ் தாவடிப்பகுதியில் விஸ்வநாதர் தர்மலிங்கம் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். 

05.02.1918 ஆம் ஆண்டு யாழ் கந்தரோடையில் பிறந்த விஸ்வநாதர் சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாக பிறந்த தர்மலிங்கம் சிறு வயது முதல் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் அதன் பயனாக முதன் முதலில் உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இப் பதவியில் ஐந்துக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக இருந்தார் அதனைத் தொடர்ந்து சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.

1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அன்றில் இருந்து 1983 ஆம் ஆண்டு வரை வரை பாராளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்ததுடன் தான் போட்டியிட்ட அத்துனை தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற அளவுக்கு மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்றவர் விஸ்வநாதர் தர்மலிங்கம் ஐந்து தடவைகள் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிற் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் S.தவராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு...

2026-09-10 19:35:45
news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

ஜனாதிபதியை சந்தித்த இந்து குருமார்கள் ;...

2026-09-10 19:37:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04