தனது நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது - சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் குற்றச்சாட்டு

02 Sep, 2026 | 04:09 PM
image

(எம்.நியூட்டன்)

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசென்று அடக்குவதிலுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஊழல் ஒழிப்பு, போதை ஒழிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறியிருந்தது.

ஆனால், நடைமுறையில் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாத தரப்பினரையும், எதிர்க்கருத்துக்களை முன்வைப்பவர்களையும் கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.

குறிப்பாக அரச அதிகாரிகள் முதல் ஓது அமைப்புகள் வரை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மற்றும் தமது கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும், அவர்களை பல்வேறு வழிகளில் முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் தொடர்கின்றன.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, நாட்டில் ஜனநாயக சூழலை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தமக்கு எதிரான குரல்களை அடக்குவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை ஜனநாயகத்துக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எனவே, அரசாங்கம் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00