22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு எதிராக நாளை கொழும்பு கோட்டையில் பிரம்மாண்ட போராட்டம் - ரஞ்சித் மத்தும பண்டார

02 Sep, 2026 | 03:16 PM
image

அரசாங்கம் கொண்டுவர முனையும் 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வியாழக்கிழமை(03)  பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சமகி ஜன பலவேகயவின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கத்தைத் தவிர நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு மக்களின் கருத்துக்கணிப்பு (Referendum) நடத்தப்படுவது அத்தியாவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத் தயாராக இல்லை என்றும், இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், "எவ்வாறாயினும் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்" என்ற பாணியில் நீதி அமைச்சர் வெளியாருக்கும் செய்திகளுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிப்பது, அவர் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயல்வதையே தெளிவுபடுத்துகிறது என சாடிய பொதுச்செயலாளர், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர் தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.கொழும்பு கோட்டையில் பிரம்மாண்ட போராட்டம்: ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் கொண்டுவர முனையும் 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாளை பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சமகி ஜன பலவேகயவின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கத்தைத் தவிர நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு மக்களின் கருத்துக்கணிப்பு (Referendum) நடத்தப்படுவது அத்தியாவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத் தயாராக இல்லை என்றும், இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், "எவ்வாறாயினும் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்" என்ற பாணியில் நீதி அமைச்சர் வெளியாருக்கும் செய்திகளுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிப்பது, அவர் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயல்வதையே தெளிவுபடுத்துகிறது என சாடிய பொதுச்செயலாளர், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர் தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

ஜனாதிபதியை சந்தித்த இந்து குருமார்கள் ;...

2026-09-10 19:37:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37