இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு ஜாவாவின் சிடோஆர்ஜோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் செவ்வாய்க்கிழமை பகல் வேளை உணவை உட்கொண்ட பின்னரே 512 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலைய அதிகாரி கெதுத் சுமேதான தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 80 சிறுவர்கள் இன்று (02) புதன்கிழமையும் பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவு விநியோகம் செய்த சந்தேகத்திற்குரிய சமையலறை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டு, அதிகாரிகளால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் ஊட்டச்சத்து முறைகேட்டை ஒழிப்பதற்காகப் பல பில்லியன் டொலர் செலவில் இந்த இலவச உணவுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
'Network for Education Watch' அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நிலவரப்படி இத்திட்டம் தொடர்பான 37,600 உணவு ஒவ்வாமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முறையற்ற உணவு சேமிப்பு மற்றும் தாமதமான விநியோகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஜூன் மாதம் தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலையத்தின் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதுடன், தரக்கட்டுப்பாட்டை மீறிய நூற்றுக்கணக்கான சமையலறைகள் மூடப்பட்டுள்ளன.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM