(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பெருமளவிலான முறைகேடுகளும் சட்டவிரோதக் கொடுப்பனவுகளும் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இத்திட்டத்தில் நிலவும் கடுமையான காலதாமதம் மற்றும் நிதி ஒழுங்கீனங்கள் குறித்து உடனடியாக ஆராயுமாறு அவர் துறைமுக அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கொழும்பு துறைமுகக் கிழக்கு முனைய திட்டப் பொறியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இத்திட்டத்தில் திட்ட முகாமைத்துவ அலகு மற்றும் ஆலோசகர் குழு ஆகியவை தனித்தனியாகச் செயல்பட வேண்டும். ஆனால், பொறியாளர்கள் இரு பிரிவுகளிலுமே பணியாற்றுவதால் கடுமையான நலன்சார் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நடுநிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இதன் காரணமாகத் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிரந்தரத் திட்டப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் 2025 ஜனவரி 3ஆம் திகதி நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், இங்கிருந்து மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் பணிகளை முடிக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இதுவரை 3 முறை இத்திட்டத்தின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதுடன், 3ஆம் கட்ட காலநீடிப்பு 2026 ஜூலை 7ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த எந்தவொரு காலநீடிப்புக்கும் அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை. தற்போது 4ஆம் கட்ட காலநீடிப்பும் துறைமுக அதிகாரசபையின் அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திட்டத்திற்கான சில கொடுப்பனவுகள் இரகசியமாக வழங்கப்படுவதாகவும், பெறப்பட வேண்டிய கொடுப்பனவுகள் நீக்கப்பகின்றன. தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் முன்பணக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதால் நாட்டுக்கும் துறைமுக அதிகாரசபைக்கும் தொடர்ச்சியான நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அத்துடன், 2019ஆம் ஆண்டின் முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின்படி போட்டிப் பரீட்சைகள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை சம்பளப் புதுப்பித்தல் எதுவும் செய்யப்படவில்லை. அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM