எகிப்தில் கோர பஸ் விபத்து: 16 பேர் உயிரிழப்பு; 28 பேர் படுகாயம்!

Published By: P. Saranya

02 Sep, 2026 | 02:59 PM
image

எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தஹாப்-நுவைபா வீதியில், அல்-சாடா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிப் பயணித்தபோதே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, 16 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 28 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எகிப்து சுகாதார அமைச்சர் காலித் அப்தெல் கஃபார் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவச் சிகிச்சை, மருந்துகள் மற்றும் உபகரணங்களை விரைவாக வழங்கிட அப்பகுதியிலுள்ள மருத்துவ வசதிகளை உச்சகட்டத் தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவக் குழுவினர் நிலமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து எகிப்து பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச்...

2026-09-10 15:49:51
news-image

உலக சுகாதார ஸ்தாபன பிராந்தியப் பணிப்பாளர்...

2026-09-10 14:58:27
news-image

இந்தியாவில் எதிர்வரும் 12, 13ல் 18வது...

2026-09-10 13:21:50
news-image

உலகின் அதிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட்...

2026-09-10 12:27:36
news-image

இடைத்தேர்தல் வெற்றி வாக்குறுதி : அமெரிக்கர்களுக்கு...

2026-09-10 11:15:10
news-image

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ –...

2026-09-10 09:51:21
news-image

சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிப்பு...

2026-09-10 13:03:12
news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59