75 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை விமானப்படையின் இல. 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு!

02 Sep, 2026 | 12:29 PM
image

இலங்கை விமானப்படையின் பெருமைமிக்க விமானப் பாரம்பரியத்தின் இதயத்துடிப்பான, 'விமானிகளின் இல்லம்' என்று  அழைக்கப்படும் இல 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது 75வது ஆண்டு விழாவை செவ்வாய்க்கிழமை (01) சீனக்குடா   விமானப்படை அகடமியில்   கொண்டாடியது. 

 ஏழரை தசாப்தங்களுக்கு மேலான நீண்ட வரலாற்றின்   இராணுவ விமானப் பயிற்சித் துறையில்  சிறப்பாக   ஆற்றப்பட்ட   இணையற்ற பணி  பெருமையுடன் நினைவுகூரப்பட்டது.  

ராயல் விமானப்படையின் பிளைட் லெப்டினன்ட் நார்மன் லஷ் அவர்களின் தலைமையில், 1951 செப்டம்பர் 01 அன்று கட்டுநாயக்கவில் தொடங்கப்பட்ட இந்தப் படைப்பிரிவு , பின்னர் இராணுவ விமானப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமான சூழலை வழங்கும் சீனக்குடா வளாகத்தில் நிறுவப்பட்டது. 

அடிப்படை விமானப் பயிற்சியுடன் தொடங்கிய இந்தப் பயணம், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப காலப்போக்கில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 

இன்று, இது PT-6 மற்றும் செஸ்னா-150 ரக விமானங்களைக் கொண்டு, அடிப்படை மற்றும் இடைநிலை விமானப் பயிற்சி வழங்கும் ஒரு முதன்மை நிறுவனமாகச் செயல்படுகிறது.

75வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல சமூக சேவை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.  மேலும் அன்றய தினம் நடைபெற்ற பிரதான ஆண்டு விழா, அப்படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் இர்ஷாத் முத்தாலிஃப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   

இந்நிகழ்விற்கு  சேவைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்,  மேலும் அவர்களுக்கு விமானங்கள் மற்றும் அது தொடர்பான நவீன தொழில்நுட்பம் குறித்த ஒரு சிறப்பு விளக்க நிகழ்வும் வழங்கப்பட்டது. 

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தாய்நாட்டிற்கு தொழில்முறைத் திறன், ஒழுக்கம் மற்றும் செயல்பாட்டுத் திறன் கொண்ட விமானிகளின் ஒரு தலைமுறையை வழங்கியுள்ள இல . 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது பெருமைமிக்க பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வருவதுடன், இலங்கையின் விமானப் போக்குவரத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07