அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களினால் மேற்காசிய பிராந்தியத்தில் நீடித்த போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பெரலுக்கு 100 அமெரிக்க டொலர்களை நோக்கி வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணை பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பிரென்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் 96 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் விலை 92 அமெரிக்க டொலராகவும் கடுமையாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் 'லாராக்' தீவில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் இலக்கு வைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகின் மொத்த மசகு எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்களின் நடமாட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.
அண்மைய நாட்களில் சரக்குக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, பல சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் இந்த வழியூடான போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM