திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் சடலமாக மீட்பு

Published By: P. Saranya

01 Sep, 2026 | 03:32 PM
image

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் ப்ரிஸ்டி முகர்ஜி, பிர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (1) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

28 வயதான ப்ரிஸ்டி முகர்ஜி, மம்தா பானர்ஜியின் தாய்வழி உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவருமான நிஹார் முகர்ஜியின் மகளாவார்.

ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள குசும்பா கிராமத்தில் அமைந்துள்ள குடும்ப வீட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில் இது தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும், எனினும் மரணத்திற்கான சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரிஸ்டி முகர்ஜி முன்னதாக போன்பூரில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் அல்லாத பணியாளராக பணியாற்றியிருந்தார். ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேடு வழக்கைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு அவரது பணி பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59
news-image

ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ;...

2026-09-09 11:14:26
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா...

2026-09-09 11:16:36
news-image

வழமைக்கு திரும்பியுள்ளது ஈபிள் கோபுரம்

2026-09-09 10:55:22
news-image

நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு...

2026-09-09 09:47:11
news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54