நடிகர் தர்ஷன் கணேசன் நடிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

01 Sep, 2026 | 03:27 PM
image

நடிகர் தர்ஷன் கணேசன் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தில் இடம் பிடித்த 'பாண்டி முனி கேக்குது' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள :லெனின் பாண்டியன்' திரைப்படத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியான், 'ஆடுகளம்' நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் , அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

காவலர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன்- அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'பாண்டி முனி கேக்குது கேட்டத கொடுப்பியா' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் இசை ஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார். பாண்டி முனி எனும் தமிழக கிராம தெய்வத்தை போற்றும் பக்தி பாடலாகவும், கதைச்சூழல் பாடலாகவும் உருவாகி இருக்கும் இந்த பாடல்-  இசைஞானியின் பிரத்யேக முத்திரையுடன் வெளியாகி இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-10 15:55:39
news-image

நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட 'ஹைக்கூ'...

2026-09-10 17:13:50
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபாலி'...

2026-09-10 15:13:27
news-image

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'சீன்'!

2026-09-10 14:34:57
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39