ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஜோன் டர்னஸ் பதவியேற்பு ; டிம் குக் புதிய பொறுப்புக்கு மாற்றம்

Published By: P. Saranya

01 Sep, 2026 | 03:16 PM
image

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் (Apple) பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பதவியில் இருந்து டிம் குக் விலகியுள்ள நிலையில், ஜோன் டர்னஸ் இன்று (செப்டம்பர் 1) புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய டிம் குக், தற்போது நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் (Executive Chairman) பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாற்றம் ஆப்பிள் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழுவால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட நீண்டகால வாரிசு திட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஜோன் டர்னஸ், இதற்கு முன்னர் ஆப்பிளின் Hardware Engineering பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவராக ஆக பணியாற்றினார். அவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், நிறுவனத்தின் பல முக்கிய வன்பொருள் தயாரிப்புகளின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தில் புதிய நிர்வாகத் தலைவர் பொறுப்பில் இருந்து சில முக்கிய நிறுவன நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்களிப்பார். குறிப்பாக உலக நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட சில விடயங்களில் அவர் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கவுள்ளார்.

ஸ்டீவ் ஜொப்ஸுக்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்ற டிம் குக்கின் தலைமையின் கீழ், நிறுவனம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்தி உலகின் மிகப் பெறுமதியான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.

இதனிடையே, ஜோன் டர்னஸ் தலைமையில் ஆப்பிளின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு அமையும் என்பது தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 'ஹோம்வியூ' ஸ்மார்ட்...

2026-10-14 12:01:59
news-image

iPhone 18 Pro, Pro Max...

2026-10-10 12:46:26
news-image

விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும்...

2026-10-05 13:40:58
news-image

இன்ஸ்டகிராம் பெண்களுக்கான செயலி - எலான்...

2026-10-02 12:55:01
news-image

AI மனிதகுலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற...

2026-09-21 16:36:41
news-image

ஸ்கொட்லாந்தில் மன்னர் சார்ள்ஸ் தலைமையில் ஏஐ...

2026-09-15 16:43:56
news-image

பெண்களின் கைகளுக்கு மெஹந்தி போடவும் இயந்திரம்...

2026-09-14 17:32:51
news-image

இந்தியாவில் கூகுளின் பிரம்மாண்ட 'அனந்தா' வளாகம்...

2026-09-12 14:40:40
news-image

iPhone 18 Pro, iPhone 18...

2026-09-10 11:16:58
news-image

ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக...

2026-09-01 15:16:48
news-image

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ...

2026-08-29 14:07:18
news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36