திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

Published By: Digital Desk 2

01 Sep, 2026 | 02:59 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய அனுபவங்களை எளிதாக வணிகமாக மாற்றும் தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். 5000 அல்லது 10,000 நபர்கள் பாவிக்கும் வகையில் பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி, அதனை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டால், அதனூடாக தங்களுடைய வாழ்வாதாரத்தை விரிவு படுத்திக் கொள்கிறார்கள்.

வேறு சிலர் தங்களது புத்திசாலித்தனத்தை பாவித்து திடீரென்று நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கான வளர்ச்சியை எட்டிப் பிடிக்கிறார்கள். ஆனால் இவர்களால் அந்த வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தொடர்ந்து தக்க வைக்க முடிவதில்லை. இதற்கு பலர் பல காரணங்களை கூறினாலும், எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இதற்கு ஏதேனும் ஒரு வகையினதான திருஷ்டி தோஷங்கள் தான் காரணம் என உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் நீங்கள் திடீரென்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்டி இருந்தாலும் அந்த உயர்ந்த நிலையை தொடர வேண்டும் என்றால் அதற்கு திருஷ்டி தோஷத்தை நீக்கிக் கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : உப்பு, பரிகார கல் , கற்பூரம்,  தேங்காய்,  பூசணிக்காய்

திங்கள் அல்லது ஞாயிறு கிழமைகளில் மாலை நேரத்தை தெரிவு செய்து, உங்களுடைய வீட்டின் மூத்த உறுப்பினர்களிடம் கல் உப்பு அல்லது தேங்காய் அல்லது பூசணிக்காயை ஒன்றைக் கொடுத்து, அதன் மீது பரிகார கல் சிறிதளவும்... அதன் மீது கற்பூரத்தையும் வைத்து ,நீங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, மூத்த உறுப்பினர் ஒருவரை வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வளமாக மூன்று முறையும் தலையை சுற்றி திருஷ்டி தோஷம் நீங்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.‌

இதன் பிறகு கல் உப்பு -தேங்காய்- பூசணிக்காய் -இந்த மூன்றில் எதனை பாவிக்கிறீர்களோ..! அதனை வீட்டு வாசலில் வாசலுக்கு வெளிப்புறத்தில் சிதறடிக்க வேண்டும்.

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு பகவான்  மற்றும் கேது பகவான் ஆகியவற்றுடன் தொடர்பு இருந்தால் இவர்கள்தான் விரைவில் மனநலம் மற்றும் உடல்நல பாதிப்பிற்கு ஆளாகுவார்கள்.

இதன் பின்னணியில் நெருக்கமானவர்களின் கொடூரமான திருஷ்டி பார்வை இருக்கும்.

இதனை துல்லியமாக அவதானித்து ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை மற்றும் பௌர்ணமி நாளில் திருஷ்டி கழிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய மன ஆற்றலும் உடல் ஆற்றலும் ஒன்றிணைந்து புதிய உந்து சக்தியை பெற்று சாதனை நோக்கி பயணிக்க வைக்கும்.

தொகுப்பு சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46