ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

01 Sep, 2026 | 02:59 PM
image

எம்முடைய மலத்தில் குருதி கலந்தோ அல்லது வெளியேற்றும் மலத்தின் நிறம் மாற்றம் பெற்றிருந்தாலோ எம்முடைய பெருங்குடல் பகுதியில் ஏதேனும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.

அதிலும் ரெக்டோசிக்மாய்ட் எனும் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெறலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய நாளாந்த உடல் கழிவுகளை வெளியேற்றும் கடமைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ.. குறிப்பாக மலம் கழிக்கும் போது மலத்தில் ரத்தம் இருந்தாலும் அல்லது வெளியேற்றும் மலத்தின் நிறம் கருமையாக இருந்தாலும், மலம் கழிக்கும் நாளாந்த பழக்க வழக்கத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து, அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய அறிகுறிகளுடன் குடல் முழுமையாக காலியாக இல்லாத உணர்வு ஏற்படும்.

காரணமின்றி அதீத சோர்வும், உடல் எடை குறைவும் உண்டாகும். வயிற்று வலி, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்புகள், அதீத வாயு தொல்லை ஆகிய அறிகுறிகளும் இருந்தால்.. உங்களுடைய பெருங்குடல் பகுதியில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.

குறிப்பாக பெருங்குடலின் இறுதி பகுதியான சிக்மாய்ட் எனும் பெருங்குடலும், மலக்குடலும் இணையும் பகுதியில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் என வகைப்படுத்துகிறார்கள்.

மரபணு மாற்றம், உணவு பழக்கம், புகை பிடித்தல், மது அருந்துதல், குடல் சார்ந்த ஏனைய பாதிப்புகள்... ஆகியவற்றின் காரணமாக இத்தகைய புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கொழுப்புச் சத்து அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் உள்ள உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், வைத்தியர்கள் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், திசு பரிசோதனை , குருதி பரிசோதனை, மல பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து புற்றுநோய் கட்டியை அகற்ற சத்திர சிகிச்சையும், அங்குள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள். வேறு சிலருக்கு டார்கெட்டட் தெரபி மற்றும் இம்யூனோ தெரபி ஆகிய சிகிச்சையை வழங்கியும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

வைத்தியர் பூஜா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22