காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை (01) திறந்து வைத்தார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய நீர் வரத்து இன்மை காரணமாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் அணையில் இருந்து விவசாயத்திற்கான நீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் விஜய் பங்கு பற்றி திறந்து வைத்தார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமான மூலம் சேலம் விமான நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். பிறகு அங்கிருந்து மேட்டூர் அணைக்கு சாலை மார்க்கமாக பயணித்தார். இதன் போது சாலையின் இரு புறங்களிலும் மக்களும் , தொண்டர்களும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மேச்சேரி மற்றும் மேட்டூர் ஆகிய பகுதிகளில் தனது வாகனத்தில் நின்றபடி விஜய் நகர் வலம் வந்தார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்விற்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு காவல்துறையினர் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை வழங்கினர். அதனை ஏற்றுக்கொண்ட விஜய், பின்னர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். முதல்வர் விஜய் மதகுகளில் இருந்து வரும் தண்ணீரில் பூக்களை தூவி வரவேற்றார்.
இந்த விழாவில் தமிழக முதல்வருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கு பற்றினர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM