இந்தியா தமிழகம் முழுவதும் உள்ள 52 கோவில்களில் செப்டம்பர் (1) முதல் பக்தர்கள் தொலைப்பேசி எடுத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இன்று முதல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரத்யேக பாதுகாப்பு அறையில் (கட்டணம் ரூ.5) வைத்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவிக்கையில்:
இன்று முதல், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோவில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோவில்களில் மட்டும் தொலைப்பேசி எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் தொலைப்பேசி தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, காணொளி பதிவு செய்வது தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கமரா வசதியுடன் கூடிய தொலைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், தொலைப்பேசிகளை திருக்கோவில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண செல்பேசிகளுக்கு இக்கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது திருக்கோவில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அனைவரும் ஒன்றிணைந்து, திருக்கோவில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM