யாழ்ப்பாணம், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவனான செந்தூரன் சந்தீஷ், 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டியில்  6.08 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியிலேயே செந்தூரன் சந்தீஷ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவ் வருடம் வயதுப் பிரிவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதால் சந்தீஷ் பதிவு செய்த 6.08 மீற்றர் தூரம் ஒரு சாதனையாக கருத்தில்கொள்ளப்படவில்லை. எனினும் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் இது புதிய சாதனைக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது.

இவர் 80 மீற்றர், 100 மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் சிறந்த நேரப் பதிவுகளைக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் சந்தீஷ் எதிர்காலத்தில் ஒரு சிறந்த மெய்வல்லுநராக பிரகாசிப்பார் என்பதில் சந்கேமில்லை.

இதேவேளை 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியில் யாழ். ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். பிரகாஸ்ராஜ் 4.35 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.