இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' என்ற நிலையில் ஆர்ஜன்டினா அணியிலிருந்து ஓய்வுபெற்றார் மெஸ்ஸி

Published By: Vishnu

01 Sep, 2026 | 12:15 AM
image

(நெவில் அன்தனி)

ஆர்ஜன்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்த முடிவு தனக்கு வேதனையளித்ததாகவும், ஆனால் நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கத்தார் 2022 உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டினா அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த 39 வயதான  மெஸ்ஸி, 207 போட்டிகளில் 125 கோல்களை அடித்து, நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல் அடித்தவர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மெஸ்ஸி வெளியிட்டுள்ள  அறிக்கை ஒன்றில், தேசிய அணிக்காக தான் அனைத்தையும் கொடுத்துவிட்டதாகவும், ஆனால் இப்போது 'கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'காலம் கடந்து கொண்டிருக்கிறது, அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன. இது என்னை மிகவும் காயப்படுத்தும் ஒன்றாகும்.'

'தேசிய அணியில் ஓர் அங்கமாக இருப்பதை நான் விரும்புகிறேன், விரும்பியிருக்கிறேன், இனியும் விரும்புவேன். நான் எனது முழு முயற்சியையும் கொடுத்துவிட்டேன், இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, எனக்குப் பின்னால் வாய்ப்புக்குத் தகுதியான சில மிகச் சிறந்த இளம் வீரர்கள் உருவாகி வருகிறார்கள்' என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், நீண்டகால நோய்க்குப் பிறகு 68 வயதில் தனது தந்தை ஜோர்ஜின் மறைவைத் தொடர்ந்து, கால்பந்தாட்டத்தில் தனது எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருவதாக மெஸ்ஸி கூறியிருந்தார்.

எட்டு முறை பெலன் டி'ஓர் விருது வென்ற அவர், அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டினா ஸ்பெயினிடம் தோல்வி அடைந்த இரண்டு தினங்களுக்கு பின்னர், ஜூலை 21ஆம் திகதியன்று தனது ஓய்வுச் செய்தியை எழுதியதாகக் கூறினார்.

அவரது விளையாட்டு வாழ்க்கை, மேஜர் லீக் கால்பந்தாட்ட அணியான இன்டர் மியாமியுடன் கழக மட்டத்தில் தொடரும்.

ஹங்கேரிக்கு எதிராக 2005இல் நடைபெற்ற நட்பறவு போட்யில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்றது. அப் போட்டியில் 63ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக மெஸ்ஸி களமிறங்கியதன் மூலம் ஆர்ஜன்டினா அணிக்காக அறிமுகமானார். இருப்பினும், ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அவர் தனது கையை வீசியபோது அவரது முழங்கை தடுப்பாட்ட வீரர் வில்மோஸ் வான்சாக்கின் மீது மோதியதால், அவருக்கு நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

சர்வதேச அரங்கில் கடினமான தொடக்கத்தை எதிர்கொண்ட போதிலும், மெஸ்ஸி பிற்காலத்தில் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து, ஆர்ஜன்டினாவுடன் உலகக் கிண்ணத்தையும் இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்களையும் வென்றார்.

உலகக் கிண்ண வரலாற்றில் 21 கோல்களுடன், பிரான்சின் கிலியான் எம்பாப்பேவுக்கு (22) அடுத்தபடியாக இரண்டாவது அதிக கோல் அடித்தவர் மெஸ்ஸி. மேலும், அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் (125) கோல்கள் அடித்த மெஸ்ஸி தனது சிறந்த சமகாலத்தவரும் போட்டியாளருமான போர்த்தக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (146) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி முதலில் 2016இல் ஓய்வு பெற்றார், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் ஆர்ஜன்டினா தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் பெனல்டி ஷூட்அவுட்டில் அவர் ஒரு பெனல்டியைத் தவறவிட்டதால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆர்ஜன்டினா தனது நான்காவது முக்கிய இறுதிப் போட்டியில் தோற்றது.

இந்த கோடைக்கால உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி எட்டு கோல்களை அடித்ததுடன், நான்கு கோல்களுக்கு உதவியும் செய்துள்ளார்.

உலகக் கிண்ணங்களில் அவர் வழங்கிய கோல் வாய்ப்புகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் 10 நாக்-அவுட் சுற்றுகளில் வழங்கப்பட்டவை. இதுவரை பதிவு செய்துள்ள வேறு எந்த வீரரும் மொத்தமாக எட்டுக்கும் மேற்பட்ட கோல் வாய்ப்புகளை வழங்கவில்லை.

'கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி,' என்று ஆதரவாளர்களை நோக்கி அவர் தனது செய்தியில் மேலும் கூறினார். 'மைதானத்திலிருந்து உங்கள் குரலைக் கேட்பதை நான் மிகவும் இழக்கப் போகிறேன்.'

இனி நான் உங்களில் ஒருவனாக, எப்போதும் ஓரத்திலிருந்து உற்சாகப்படுத்தி ஆதரவளிப்பேன்.

'எனது அணி வீரர்களுடன் சேர்ந்து, நாங்கள் கனவு மட்டுமே கண்ட தருணங்களை உங்களுக்கு வழங்கினோம் என்ற மன அமைதியுடனும் பெருமையுடனும் நான் விடைபெறுகிறேன்.

'உங்கள் அனைவருடனும் இதை அனுபவித்தது அற்புதமாக இருந்தது. நான் உங்களை நேசிக்கிறேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு பயிற்சிப்...

2026-09-10 19:35:15
news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38
news-image

ஏஸ் கெப்பிட்டல் சிசி அணியை 64...

2026-09-10 02:04:13
news-image

பொலிஸ் கழகத்தின் கடும் சவாலை முறியடித்து...

2026-09-10 01:58:39
news-image

முவர்ஸ் அணியுடனான கால் இறுதியில் 2...

2026-09-09 22:14:27
news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17