(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (31) மாலை நடைபெற்ற சீ ஹோக்ஸுக்கு எதிரான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் 81 நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளையாடிய கலம்போ எவ்சி, கடைசி நிமிட கோல் மூலம் போட்டியை 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இந்தப் போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருந்த கலம்போ எவ்சி கடைசி நேரத்தில் போட்டியை சமப்படுத்திக்கொண்டதால் 7 போட்டிகளில் தோல்வி அடையாத அணி என்ற பதத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் சுப்பர் சிக்ஸ் தகுதியைப் பெறும் சீ ஹோக்ஸின் வாய்ப்பு சற்று தாமதம் அடைந்துள்ளது.
போட்டியின் 19ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் வீரர் ஒருவரை தாக்கிய கலம்போ எவ்சி வீரர் மொஹமத் பாதிலுக்கு மத்தியஸ்தர் ஆசிவ் அஸ்கர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார்.
இதனை சாதகமாக்கிக்கொண்ட சீ ஹோக்ஸ் தொடர்ச்சியாக கலம்போ எவ்சியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. ஆனால, கோல் போடுவதில் பல தடவைகள் கோட்டைவிட்டது.
இடைவேளையின்போது எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் 49ஆவது நிமிடத்தில் நவிந்து ஷெஹான் சில்வா தனது தலையால் பந்தை முட்டி அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு சீ ஹோக்ஸ் அணியை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.
இதன் மூலம் இந்த வருட சுப்பர் லீக்கில் கலம்போ எவ்சி அணிக்கு எதிரான கோல் போட்ட முதலாவது வீரர் என்ற பெருமையை நவிந்து ஷெஹான் சில்வா பெற்றுக்கொண்டார்.

அத்துடன் கடந்த 6 போட்டிகளில் ஒரு கொலைத்தானும் விடாமல் இருந்த கலம்போ எவ்சி கோல்காப்பாளர் மொஹமத் இம்ரான் இந்தப் போட்டியில் முதல் தடவையாக ஒரு கோலை விட்டார்.
இதனைத் தொடர்ந்து கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை சீ ஹோக்ஸ் வீரர்கள் முறையாகப் பயன்படுத்த தவறினர்.
போட்டியில் 90ஆவது நிமிடங்கள் பூர்த்தியனாதும் 7 நிமிட உபாதையீடு நேரம் வழங்கப்பட்டது.
உபாதையீடு நேரத்தின் கடைசி நிமிடத்தில் கலம்போ எவ்சிக்கு 35 யார் தூர ப்றீ கிக் ஒன்று கிடைத்தது.
சலன சமீர ப்றீ கிக் மூலம் சீ ஹோக்ஸ் கோலை நோக்கி பந்தை செலுத்தினார்.

சீ ஹோக்ஸ் அணியின் வெளிநாட்டு கோல்காப்பாளர் ஆப்டெல்ஹமித் எல்பஸ்டாவ்ஸ்கி பந்தை சரியாக பிடிக்கத் தவறியதுடன் எகிறி வந்த பந்தை மாற்று வீரர் இப்ராஹிம் லெப்பே கோலாக்கி, கலம்போ எவ்சியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
சற்று நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM