AFC 20இன் கீழ் ஆசிய கிண்ணம் சீனா 2027: தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவில் மியன்மாரிடம் வீழ்ந்தது இலங்கை

Published By: Vishnu

31 Aug, 2026 | 07:21 PM
image

(நெவில் அன்தனி)

மியன்மாரின் யங்கொன் துவுன்னா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணம் 2027 தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவுக்கான (Development Phase) கே குழு போட்டியில் மியன்மாரிடம் 0 - 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை மோசமான தோல்வியைத் தழுவியது.

இப் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மியன்மார் இடைவேளைக்கு முன்னர் 3 கோல்களையும் இடைவேளைக்குப் பின்னர் ஒரு கோலையும் புகுத்தி வெற்றியீட்டியது.

இந்தத் தோல்வியால் 2031 ஆசிய கிண்ணம் பிரதான தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை தரமுயர்வது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இப் போட்டியின் 18ஆவது நிமிடத்தில் மியன்மார் முதலாவது கோலைப் போட்டு முன்னிலை அடைந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் மியன்மார் வீரர் மின்ட் மியாட் கோ கோ தலையினால் முட்டிய  பந்தை இலங்கை கோல் காப்பாளர் தட்டிவிட அப் பந்து சாய் போ போ கியாவை நோக்கிச் சென்றது. அவர் வேகமாக செயற்பட்டு பந்தை கோலினுள் புகுத்தி மியன்மார் அணியை முன்னிலையில் இட்டார்.

ஒன்பது நிமிடங்கள் கழித்து இலங்கை அணியின் பெனல்டி எல்லைக்கு வெளியில் இருந்து மியன்மார் வீரர் கோங் கான்ட் கியாவ் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் சாய் போ போ கியாவ் பந்தை நகர்த்திச் சென்று கவ்ங் கான்ட் கியாவுக்கு பரிமாற அவர் அதனை கோலுக்குள் இலாவகமாக புகுத்தினார்.

இடைவேளையின்போது மியன்மார் 3 - 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் தடுத்தாடும் உத்தியைக் கையாண்ட இலங்கை 85ஆவது நிமிடம் வரை தமக்கு எதிராக மேலதிக கோல் போடப்படுவதை  தடுத்தவாறு விளையாடியது.

ஆனால், 86ஆவது நிமிடத்தில் மியன்மார் வீரர் சாய் ஸொம் ஷாங் பெனல்டி எல்லைக்குள் இருந்து கோல் போட்டு  தனது அணியின் கோல் எண்ணிக்கையை 4ஆக உயர்த்தினார்.

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் மாலைதீவுகளை எதிர்வரும் வியாழக்கிழமை எதிர்தாடவுள்ளது.

இக் குழுவில் புருணை தாருஸ்ஸலாம் நான்காவது அணியாக இடம்பெறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58