(நேர்கண்டவர் - மா.உஷாநந்தினி)
“இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழக்கூடியவர்கள்", “இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பாக இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கலந்தாலோசித்து வருகின்றன..." என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் இந்திய முன்னணி திரைப்பட நடிகையுமான குஷ்பு சுந்தர் கூறினார்.
கொழும்பு சைவ மங்கையர் கழகம் கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்திய 'வானவில்’ கலை நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்து கலந்துகொண்ட குஷ்பு சுந்தர், வீரகேசரிக்கு தனது கருத்துக்களை இவ்விதமாக பகிர்ந்திருந்தார்.
நிகழ்ச்சியின் நிறைவுவேளையில் ஏற்பட்ட பரபரப்பான சூழலில், “கொஞ்சம் பொறுமை தேவை. எல்லாமே இரண்டு நிமிட நூடுல்ஸ் கிடையாது. வாழ்க்கையில் பொறுமை, நிதானம் மிக மிக முக்கியம்..." என்றார். போகிறபோக்கில் குஷ்பு அளித்த சிறு பேட்டி இனி...
இலங்கை மண்ணில் குஷ்பு சுந்தர்... எப்படி உணர்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இலங்கை, “நம்ம" வீடு மாதிரி. அதிக தூரம் கிடையாது. ஒன்றரை மணிநேரம்தான். ஒவ்வொரு முறை இலங்கைக்கு வரும்போதும், “நம்ம" ஊருக்கு, “நம்ம" வீட்டுக்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
நீங்கள் இலங்கையை மையப்படுத்தி Maharanis - Tinsel Queens என்கிற திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அதைப் பற்றி சில வார்த்தைகள்...
அது திரைப்படம் அல்ல. அது ஒரு நிகழ்ச்சி. அதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின், மிகப் பெரியளவில் அந்த நிகழ்வை அறிமுகப்படுத்துவோம்.
இலங்கை கலைஞர்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம்...
வாழ்த்துகள்! மிக நன்றாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். நம் கலைஞர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயமாக சந்திப்பேன்.
இது பரதநாட்டிய நிகழ்வாகவும் இருப்பதால் ஒரு கேள்வி.... தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் பரதம் ஆடி, அதிகமாக பார்த்ததில்லையே... என்ன காரணம்?
அடிப்படையில் நான் ஒரு கதக் நடனக் கலைஞர். பரதநாட்டியம் ஆடுவதற்கு ஏற்ற கதாபாத்திரம் எனக்கு அதிகமாக அமையவில்லை. இனி, அப்படியான கதாபாத்திர வாய்ப்பு வந்தால் நிச்சயமாக ஏற்பேன்.
“நான் Boomerஆக இருப்பதில் சந்தோஷப்படுகிறேன்" என்று சொன்னீர்கள்... GenZ தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?
கொஞ்சம் பொறுமை தேவை. எல்லாமே இரண்டு நிமிட நூடுல்ஸ் கிடையாது. எல்லா ரியாக்ஷன்களையும் எல்லாத் தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். இதற்கு, இப்போதே ரியாக்ஷன் வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ்க்கையில் பொறுமை, நிதானம் மிக மிக முக்கியம்.
“இந்திய நாடாளுமன்ற நுழைவே என் கனவு" என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள்... அதற்கான உங்கள் அடுத்தகட்ட முயற்சி என்ன?
அது, கட்சி ரீதியான தீர்மானம். கட்சித் தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எல்லோரும் ஒன்றுபட்டு வாழக்கூடியவர்கள்.
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வு, அதற்காக இந்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து...
இது தொடர்பாக இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கலந்தாலோசித்து வருகிறது. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM