இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

31 Aug, 2026 | 05:33 PM
image

எம்மில் சிலருக்கு மூன்று வயது வரையிலான பிள்ளைகளுக்கு திடீரென்று வயிற்று வலி, வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். இத்தகைய தருணத்தில் பெற்றோர்கள் அச்சமடைந்து.. உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெறுபவர். அத்தகைய தருணங்களில் பிள்ளைக்கு இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியர்கள் விவரிப்பார்கள்.

இண்டஸ்ஸஸ்செப்ஷன் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் சொல்லிற்கு எம்முடைய குடலின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்குள் ஊடுருவி இருப்பதை தான் குறிக்கிறது. இது ஒரு வைத்திய உதவி பெறுவதற்கான அவசர நிலையாகும். மேலும் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கா விட்டால்... குருதி ஓட்ட தடை, திசு இழப்பு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி, பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.‌

இத்தகைய தருணங்களில் குடலின் ஒரு பகுதி தொலைநோக்கி கருவியை போல அருகில் உள்ள மற்றொரு உறுப்பின் பகுதிக்குள் மடிந்து விடும். இத்தகைய தருணத்தில் செரிமான மண்டலத்தின் பாதையில் அடைப்பு ஏற்படக்கூடும். இதனால் குருதிய ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும் அங்குள்ள ஆரோக்கியமான திசுக்களும் மரணித்து விடும். இது மூன்று வயது வரை உள்ள பிள்ளைகளில் இருந்து எந்த வயதினரையும் தாக்கலாம். ஆனால் மருத்துவ ஆய்வின்படி பத்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மரபணு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு காரணிகள், தன்னுடலை தாக்கும் நோயுதற்கு மண்டலம்... என சில காரணிகளால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

வயிற்று வலி, வாந்தி, மலத்தில் குருதி வெளியேறுதல், வயிறு வீக்கம், சோர்வு ..ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிலருக்கு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்பட்டால்.. நோயின் தீவிர நிலையை உணர்ந்து, உடனடியாக வைத்திய சிகிச்சையை பெற வேண்டியதிருக்கும்.

இவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ,சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, குருதி பரிசோதனை, குடல் வால் அழற்சி பரிசோதனை, இரைப்பை செயல்பாட்டு திறன் பரிசோதனை... போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர். இதற்கு பலன் கிடைக்காதவர்களுக்கு குடல் பகுதியில் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

வைத்தியர் பாரி முத்துக்குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22