மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக குறிப்பு..?!

31 Aug, 2026 | 05:31 PM
image

எம்மில் சிலர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினாலும் அல்லது அரசாங்கத்தில் பணியாற்றினாலும்... மாதாந்திர ஊதியத்தை முதல் திகதி இருந்து பத்து திகதிக்குள் முழுவதுமாக செலவழித்துவிட்டு, அதன் பிறகு மாதம் முழுவதும் கடன் வாங்குவர். இது ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடைபெறும் விடயம்.

இதில் சிலர் மட்டும்தான் தாங்கள் பெறும் மாத ஊதியத்தை மாதம் முழுவதும் கையில் வைத்திருப்பர். இதற்கு அவர்கள் தொடர்ந்து பாவிக்கும் பிரத்யேக சூட்சமங்கள் தான் காரணம் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் விவரித்துள்ளனர்.

மாத சம்பளம் என்பது உங்களுக்கு ரூபாயாக கையில் வழங்கப்பட்டாலும்... அல்லது உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டாலும்... அதிலிருந்து உங்களுடைய முதல் செலவு உப்பு- பால் மற்றும் வளரக்கூடிய செடி ஆகியவற்றினை வாங்கிட வேண்டும். இத்தகைய பொருட்கள் உங்களுடைய சேமிப்பை வலிமைப்படுத்துவதுடன், அவசியமற்ற செலவுகளை தவிர்த்து உங்களுடைய மாத சம்பளத்தை மாதம் முழுவதும் கையில் வைத்திருக்கும் நிலையை உண்டாக்கும்.

உடனே எம்மில் சிலர் உப்பு- பால் மட்டும் வாங்கலாமா? அல்லது மாதந்தோறும் செடியை வாங்க வேண்டுமா? எனக் கேட்பர். மாதந்தோறும் செடியை வாங்க வேண்டியதில்லை. ஆனால் அந்த செடிக்கு நாளாந்தம் நீரூற்றி பராமரித்து வந்தால் போதுமானது. மாதந்தோறும் அதற்கென நேரத்தை ஒதுக்கி, அதனை சீர்படுத்தி, மேலும் வளர்வதற்காக தூண்டினால் போதுமானது.

உப்பு - பால் மற்றும் செடி ஆகியவை பிரபஞ்சத்தின் மூலம் உங்களின் எண்ணங்களை ஆக்கிரமித்து தேவையானதற்கு மட்டுமே செலவு செய்ய தூண்டும். இதன் மூலம் அவசியமற்ற செலவுகளை நீக்கி , சேமிப்பை தொடங்கச் செய்யும். மாத தவணைகளுக்காக செலுத்தும் தொகையும், நிலையும் குறையும்.

தொகுப்பு: சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46