தங்­காலை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்­வரும் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக் ஷ எம்.பி. இரா­மா­ய­ணத்தின் சுந்­தர காண்டம் பகு­தியை வாசிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றாராம்.

மத்­தள விமான நிலையம் உட்­பட நாட் டின் வளங்­களை வெளிநா­ட்டிற்கு விற்­பனை செய்­வதை கண்­டித்து கடந்த ஆறாம் திகதி அம்­பாந்­தோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்டம் தொடர்­பாக கடந்த 10ஆம் திகதி மாலை கல­கம பொலிஸ் நிலை­யத்தில் இடம்­பெற்ற மூன்று மணி நேர விசா­ர­ணை­களை அடுத்து  அரச சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்த குற்­றச்­சாட்டில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் கூட்டு எதி­ரணி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜ­பக் ஷ, டி.வி. சானக்க, கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­சன்ன ரண­வீர, மேல் மாகாண சபை உறுப்­பினர் உபாலி கொடி­கார, தென் மாகாண சபை உறுப்­பினர் சம்பத் அத்­து­கோ­ரள மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன ஆகிய அறு­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். 

இவர்கள் அம்­பாந்­தோட்டை நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து தங்­காலை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அறு­வரும் ஒரே சிறைக்­கூ­டத்­தி­னுள்­ளேயே தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் நாமல் ராஜ­பக் ஷ எம்.பி.சிறைக்­கூ­டத்தில் இரா­மா­ய­ணத்தின் சுந்­தர காண்டம் பகு­தியை வாசிப்­ப­தற்கு ஆரம்­பித்­துள்­ளாராம்.

சுந்­தர காண்டம் பகு­தியை வாசிப்­பதால் பல்­வேறு நன்­மைகள் கிடைக்கும் என அவரின் தமிழ் நண்­ப­ர்கள் அளித்த ஆலோ­ச­னையை  அடுத்து இந்த செயற்­பாட்டை ஆரம்­பித்­துள்­ளாராம். இரா­ம­ாய­ணத்தின் ஏழு காண்­ட­களில் சுந்­தர காண்­ட­மா­னது விஷ்­ணுவின் அவ­தா­ர­மான இரா­ம­னு­டைய ஆத்­மான பக்­த­னான ஆஞ்­ச­நே­யரின் அறிவுக் கூர்மை, வீரம், சொல்­வன்மை, பெருமை, பக்தி உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. 

குறிப்­பாக சுந்­தரகாண்­டத்­தினை பாரா­யணம் செய்­வதால் அல்­லது வாசிப்­பதால், இறை­பக்தி, மனதிற்கு நிம்மதி, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மனோ பலம், துன்பங்கள், துக்கம் நிறைவுக்கு வந்து தைரியம் என்பன கிடைக்கும் என முன்னோர்கள், ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.